Thursday, May 24, 2018

புதுப்பிக்கட்ட விண்டோஸ் 10ஐ பயன்படுத்துவது எப்படி? சிம்பிள் டிப்ஸ்.!

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சமீபத்திய பதிப்பு விண்டோஸ் 10 ஆபரேட்டிங் சிஸ்டம். மிகவும் பிரபலமான விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8.1 ஆகிய முந்தைய பதிப்புகளை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. சீரமைக்கப்பட்ட பயன்பாட்டு முறைகளுடன் மேம்படுத்தப்பட்ட அம்சங்கள் இதில் இடம்பெற்றுள்ளது.


விண்டோஸூடனான உங்களது அனுபவம் அதிகளவில் இருந்தாலும், விண்டோஸ் 10 ஈர்ப்புக்கு சில உதவிகள் உங்களுக்கு நிச்சயம் தேவைப்படும். அதனால் உங்களுக்கு சில சிறந்த டிப்ஸ்களும், சூட்சமங்களும், வழிகாட்டுதலும் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.  ஏப்ரலில் அப்டேட் செய்யப்பட்ட (புதுப்பிக்கட்ட) விண்டோஸ் 10ன் பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் மேலும் சிறப்பம்சங்கள் பல உள்ளது. இதற்கு உதவும் வகையில் இங்கு உங்களுக்கு வழிகாட்டு தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளது. ஏப்ரலில் அப்டேட் செய்யப்பட்ட விண்டோஸ் 10 பதிப்பை எவ்வாறு டவுன்லோடு செய்து இன்ஸ்டால் செய்வது என்பது குறித்து காண்போம்.



விண்டோஸ் 10ஐ எப்படி டவுன்லோடு மற்றும் இன்ஸ்டால் செய்வது?.

உங்களது கம்ப்யூட்டரில் இந்த சாப்ட்வேர் இல்லை என்றால், விண்டோஸ் 10ஐ பயன்படுத்த கற்றுக் கொள்வதற்கு முன்பு இதை எப்படி டவுன்லோடு செய்து இன்ஸ்டால் செய்ய வேண்டும் என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். எடுத்தவுடனே டவுன்லோடு பட்டனை அழுத்தக் கூடாது. முதலில் விண்டோஸ் 10க்கு அப்டேட்டுக்கு எப்படி தயாராக வேண்டும் என்பதை பார்க்க வேண்டும். இந்த பரிசோதனையின் மூலம் உங்களது கம்ப்யூட்டர் விண்டோஸ் 10ஐ இன்ஸ்டால் செய்ய தயாராக உள்ளதா என்பதை தெரிந்து கொள்ள முடியும். 

விண்டோஸ் 10 அப்டேட் ஆலோசகரை பயன்படுத்துவதற்கு முன்பு கம்ப்யூட்டர் டிரைவில் உள்ள உங்களது தகவல்கள், முக்கிய கோப்புகளை சேகரித்து வைத்து கொள்ள வேண்டும். 

இதன் மூலம் விண்டோஸ் 10 அப்டேட் பணி பிரச்னையின்றி சுமூகமாக நடைபெறும் என்பதை உறுதிபடுத்த முடியும். இதில் சந்தேகம் எதுவும் இருந்தால், விண்டோஸ் 10ஐ எப்படி டவுன்லோடு செய்வது என்பது குறித்து நாங்கள் உங்களுக்கு விளக்கம் அளிக்கிறோம். 

தற்போது உங்களது கம்ப்யூட்டர் விண்டோஸ் 10ஐ இன்ஸ்டால் செய்ய தயாராக இருந்தால் இந்த செயல்முறை நேரடியாக நடக்கும்.



முதல் ஸ்டெப்: விண்டோஸ் 10 ஆப் இருப்பதை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். 

உங்களது கம்ப்யூட்டர் விண்டோஸ் 10ஐ டவுன்லோடு செய்து இன்ஸ்டால் செய்ய தயாராக இருந்தால், திரையில் விண்டோஸ் 10 ஆப் தெரியும். திரையில் கீழ் இடதுபுற மூலையில் உள்ள டாஸ்க்பாரின் நோட்டீபிக்கேசன் பகுதியில் இது இடம்பெற்றிருக்கும். உங்களது விண்டோஸ் 10 உரிமையை பாதுகாக்க இந்த ஆப் அனுமதி அளிக்கும். இதன் மூலம் விண்டோஸ் 10 அப்டேட்டிற்கு நீங்கள் ஆர்வமாக இருக்கிறீர்கள் என்பதை மைக்கேராசாப்ட் நிறுவனம் தெரிந்து கொள்ளும்.



2வது ஸ்டெப்: விண்டோஸ் அப்டேட்டில் இருந்து விண்டோஸ் 10ஐ டவுன்லோடு செய்யவும் உரிமை பாதுகாப்புக்கு ஒப்புதல் வழங்கியவுடன் உங்களது விண்டோஸ் 10 டவுன்லோடு ஆக தயாராகிவிடும். விண்டோஸ் 10 தானாக டவுன்லோடு ஆகி அப்டேட் ஆகவில்லை என்றால் இதை முயற்சி செய்யவும். கம்ப்யூட்டரின் ஸ்டார்ட் மெனுவில் ‘‘விண்டோஸ் அப்டேட்'' என்று உங்களது விண்டோஸ் 7 அல்லது விண்டோஸ் 8ல் டைப் செய்யவும். இதன் பின்னர் உங்களது விண்டோஸ் 10 டவுன்லோடு மற்றும் இன்ஸ்டால் ஆக தயாராக இருப்பதை பார்க்கலாம்.


விண்டோஸ் 10ன் ஏப்ரல் அப்டேட்டை எப்படி டவுன்லோடு செய்து இன்ஸ்டால் செய்வது? 

ஏப்ரல் அப்டேட் மூலம் பல உற்சாகமான மற்றும் விண்டோஸ் 10ன் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் வகையிலான பயனுள்ள அம்சங்கள் இதில் இடம்பெற்றுள்ளது. இது ஏற்கவனே சிறந்த ஆபரேட்டிங் சிஸ்டமாக விளங்கும் விண்டோஸ் 10ஐ மேலும் மெருகேற்றும் வகையில் அமைந்துள்ளது.



விண்டோஸ் 10ன் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பது எப்படி? 

விண்டோஸ் 10ஐ இன்ஸ்டால் செய்த பின்னர் எதுவும் பிரச்னை எழுந்தால் இதற்கு தீர்வு இங்கே தீர்வு கொடுக்கப்பட்டுள்ளது. ‘விண்டோஸ் 10 அப்டேட்' இணைய பக்கத்தை தேர்வு செய்து ‘அப்டேட் நவ்' கிளக் செய்யவும். தற்போது டூல் டவுன்லோடு ஆகும். இதன் பின்னர் விண்டோஸ் 10ன் சமீபத்திய பதிப்பை பரிசோதனை செய்து கொள்ளலாம்.


விண்டோஸ் 10 இன்ஸ்டால் ஆகவில்லை என்றால் அதை எப்படி பெறுவது? 

சில பிரச்னைகள் காரணமாக விண்டோஸ் 10 அப்டேட் திரையில் தெரியாமல் போகலாம். இதற்காக கவலைப்பட வேண்டாம். கம்ப்யூட்டரில் உள்ள அனைத்து ஆன்டி வைரஸ் மற்றும் ஃபயர்வால்ஸ் ஆகியவற்றை செயலிழக்க செய்து விட வேண்டும். இதன் பின்னர் விண்டோஸ் அப்டேட்டை மைக்ரோசாப்ட்டின் பிக்சிட் டூலை பயன்படுத்தி விண்டோஸை ரீசெட் செய்ய வேண்டும். இதன் பின்னரும் வேலை செய்யவில்லை என்றால் மைக்ரோசாப்படில் இருந்து ‘சிஸ்டம் அப்டேட் ரீடீனஸ் டூல்' டவுன்லோடு செய்யவும்.



விண்டோஸ் 10ல் இரட்டை ஆபேரட்டிங்ஸ் சிஸ்டம் பயன்பாடு:

விண்டோஸ் 10 மூலம் திருப்தி ஏற்படவில்லை என்றால் இதர ஆபரேட்டிங் சிஸ்டம், அதாவது விண்டோஸ் 8.1 அல்லது லினக்ஸ் போன்வற்றையும் இரண்டாவதாக பயன்படுத்த முடியும். இதற்கு மல்டிபூட் விண்டோஸ் 10ஐ தேர்வு செய்யவும். இதன் மூலம் 2வது ஆபரேட்டிங் சிஸ்டத்தை தேர்வு செய்ய கம்ப்யூட்டரில் சுவிட்ச் உருவாக்கி கொள்ளலாம். இதன் மூலம் விண்டோஸ் 10ல் வேலை செய்யாத சில ப்ரோகிராம்களை 2வது ஆபரேட்டிங் சிஸ்டத்தில் பயன்படுத்தலாம்.



விண்டோஸ் 10ஐ ரீ இன்ஸ்டால் செய்தல்? 

விண்டோஸ் 10 பயன்படுத்துவதில் சிரமம் குறைவாக இருக்கும். எனினும் சமயங்களில் இதில் பிரச்னை ஏற்படலாம். இந்த சமயங்களில் விண்டோஸ் 10ஐ ரீ இன்ஸ்டால் செய்ய வேண்டும். ரீ இன்ஸ்டால் செய்வதன் மூலம் கம்ப்யூட்டரில் விண்டோஸ் 10 பயன்பாட்டின் வேகம் அதிகரிக்கும். புதிய விண்டோஸ் 10 கிடைத்தவுடன் உங்களது கம்ப்யூட்டருக்கு புத்துணர்ச்சி கிடைத்திருப்பதை கண்டு நீங்கள் ஆச்சர்யப்படுவீர்கள். விண்டோஸ் 10ஐ ரீ இன்ஸ்டால் செய்யும் வழிமுறைகள பல உள்ளது. ரீ ஸ்டோர் மற்றும் ரெபிரஷ் போன்றவற்றை இது சிறந்த வழிமுறையாகும்.


மைக்ரோசாப் கணக்கு தொடங்குவது எப்படி? 

விண்டோஸ் 10 டவுன்லோடு செய்து இன்ஸ்டால் செய்தவுடன் மைக்ரோசாப்ட் கணக்கை தொடங்க வேண்டி வரும். இது விண்டோஸ் 10க்குள் செல்ல அனுமதி வழங்குவதோடு மட்டுமின்றி விண்டோஸ் ஸ்டோரில் இருந்து ஆப்களை வாங்கி இன்ஸ்டால் செய்யவும் பயன்படும். அதோடு உங்களது கோப்புகள் மற்றும் செட்டிங்ஸ்களை சேமித்து வைக்கவும் உதவும். 

விண்டோஸ் 10 அப்கிரேட் செய்த பின்னர் விண்டோஸ் 7 அல்லது விண்டோஸ் 8ஐ எப்படி டெலீட் செய்வது? விண்டோஸ் 10 இன்ஸ்டால் செய்தவுடன் உங்களது முந்தைய விண்டோஸ் பதிப்பும் கம்ப்யூட்டரில் இருக்கும். புதிய பதிப்பை விரும்பவில்லை என்றாலோ அல்லது பிரச்னைகள் எழுந்தாலோ இதை பயன்படுத்திக் கொள்ளலாம். விண்டோஸ் 10 மூலம் நீங்கள் திருப்தி அடைந்தால் கூடுதல் ஸ்டோரேஜ் இடம் கிடைக்கும் வகையில் முந்தைய விண்டோஸ் பதிப்புகளை டெலீட் செய்துவிட வேண்டும்.


விண்டோஸ் 10ல் இருந்து கூடுதலாக நீங்கள் பெறலாம்:

விண்டோஸ் 10 என்பது ஆபரேட்டிங் சிஸ்டத்தின் பவர் ஹவுஸ் என்று கூறலாம். இதில் நிறைய சிறப்பம்சங்கள் உள்ளன. இதில் பல அம்சங்கள் மறைந்து இருக்கும். இந்த டூல்ஸை நீங்கள் பயன்படுத்தவில்லை என்றால் உங்களது கம்ப்யூட்டர் செய்யக் கூடிய சில விஷங்களை நீங்கள் தவறவிட நேரிடும். உங்களது கம்ப்யூட்டரில் கீ போர்டு மற்றும் மவுஸ் பல வேலைகளை செய்ய முடியும். 

அதேபோல் இதில் குரல் அங்கிகார வசதி இன் பில்ட் செய்யப்பட்டுள்ளது. இதன் பெயர் கார்டனா. இது பேப்பர் கிளிப் 2.0 கிடையாது. இதன் மூலம் நீங்கள் சிறிய அளவில் முயற்சி செய்தாலே பல நன்மைகள் கிடைக்கும். இதுபோல் பல ரகசிய தகவல்கள் விண்டோஸ் 10ல் மறைந்து கிடக்கிறது. நீங்களாக ஆராய்ந்து பார்த்து அவற்றை கண்டுபிடிக்கும் வகையில் எளிமையாக கொடுக்கப்பட்டுள்ளது.



விண்டோஸ் 10ஐ எப்படி அன்இன்ஸ்டால் செய்து முந்தைய விண்டோஸ் பதிப்புகளை கொண்டு வருவது? 

விண்டோஸ் 10 ஒரு நல்ல ஆபரேட்டிங் சிஸ்டம். நீங்கள் விண்டோஸ் 7 அல்லது விண்டோஸ் 8ல் இருந்து விண்டோஸ் 10க்கு சென்றால் அது உங்களுக்கு உகந்ததாக இருக்காது. எனினும் விண்டோஸ் 10ல் இருந்து மீண்டும் பழைய விண்டோஸ் 7 அல்லது விண்டோஸ் 8க்கு திரும்புவது மிகவும் எளிதான விஷயம். 

விண்டோஸ் 10ஐ அப்கிரேட் செய்து 30 நாட்களுக்குள் அதை அன்இன்ஸ்டால் செய்ய வேண்டும் என்று நீங்கள் முடிவு செய்தால் அது மிகவும் எளிது. உடனடியாக அன்இன்ஸ்டால் செய்துவிடலாம். 

ஸ்டார்ட் மெனுவுக்கு சென்று செட்டீங்ஸை தேர்வு செய்ய வேண்டும். பின்னர் அப்டேட் மற்றும் செக்யூரிட்டிக்கு செல்ல வேண்டும். அங்கிருந்து ரெக்கவரியை தேர்வு செய்ய வேண்டும். அப்போது விண்டோஸ் 7 அல்லது விண்டோஸ் 8க்கு திரும்ப செல்ல வேண்டுமா என்று கேட்கும். இது கம்ப்யூட்டரில் உள்ள முந்தைய விண்டோஸ் பதிப்பை பொறுத்தது. இங்கு கெட் ஸ்டார்டட் பட்டனை தேர்வு செய்தால் அதன் செயலாக்கம் தொடங்கிவிடும். நீங்கள் ஏன் அன்இன்ஸ்டால் அல்லது டவுன்கிரேடு செய்கிறீர்கள் என்று கேட்கும். இதற்கு பதிலளித்தவுடன் செயலாக்கம் முடிந்துவிடும். இந்த செயலாக்கம் முடிந்தவுடன் விண்டோஸ் 7 அல்லது விண்டோஸ் 8 வேலை செய்ய தொடங்கிவிடும். 

அதே சமயம் நீங்கள் நீண்ட நாட்கள் பயன்படுத்திவிட்டு விண்டோஸ் 10ஐ அன்இன்ஸ்டால் செய்ய வேண்டும் என்றால் அது கொஞ்சம் சிக்கலான விஷயம் தான். விண்டோஸ் 10ஐ அன்இன்ஸ்டால் கொடுத்து விட்டு, அதன் பிறகு நீங்கள் விண்டோஸ் 7 அல்லது விண்டோஸ் 8ஐ முழு அளவில் தான் இன்ஸ்டால் செய்ய வேண்டும்.


வைரஸ் இல்லாமல் விண்டோஸ் 10 வைத்திருத்தல்: 

வைரஸ் தாக்குதலில் இருந்து விண்டோஸ் 10ஐ பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். விண்டோஸ் 10 மிக பாதுகாப்பான ஆபரேட்டிங் சிஸ்டம். இன்டர்நெட் வைரஸ் தாக்குதலில் இருந்து பாதுகாக்கும் வகையில் உள்ள உயர்திறன் கொண்ட ஆன்டி வைரஸ் டூல்ஸ்களுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும். ஆன்டி வைரஸ் கம்ப்யூட்டரை மட்டுமின்றி உங்களது கோப்பு, தகவல்களையும் பத்திரமாக பாதுகாக்கும். அதனால் பாதுகாப்பான ஆன்டி வைரஸ்களை பயன்படுத்தி இன்டர்நெட்டை நிம்மதியாகவும், மகிழ்ச்சியாவும், ஆபத்து இல்லாமலும் பயன்படுத்துங்கள். 

விண்டோஸ் 10ல் வைஃபை பராமரித்தல்:
விண்டோஸ் 10ல் வைஃபை சிறப்பம்சங்கள் நிறைந்துள்ளது. புதிய மற்றும் பழைய அம்சங்கள் இருப்பதால் வைஃபை இணைப்பு பெறுவது மிக எளிது. இதில் வைஃபை சென்ஸ் என்ற ஒரு செட்டிங்ஸ் உள்ளது. இது உங்களது வைஃபை இணைப்பு பாதுகாப்புடன் இருக்கிறதா? என்பதை அறியலாம். 

விண்டோஸ் 10ல் குடும்ப பாதுகாப்பை எப்படி பயன்படுத்துவது? விண்டோஸ் 10ல் பேரன்ட்டல் கன்ட்ரோல் சிஸ்டம் உள்ளது. இதை மைக்ரோசாப்ட் குடும்ப பாதுகாப்பு என்று அறியப்படுகிறது. இதன் மூலம் குழந்தைகள் அபாயகரமான, தேவையற்ற இணையதளங்கள் பார்த்தல், ஆப் டவுன்லோடு செய்தல் போன்றவற்றை கட்டுப்படுத்தலாம். குழந்தைகள் எந்த நேரத்தில் கம்ப்யூட்டரை பயன்படுத்தினார்கள் என்பதை நீங்கள் கண்டறியலாம். அவர்களது செயல்பாட்டையும் இது கண்காணிக்கும். இதன் மூலம் முழு பாதுகாப்பான இன்டர்நெட்டை உங்களது குடும்பத்தினர் பயன்படுத்தலாம்.

0 comments:

Post a Comment