மொபைல் வீடியோ மேக்கர்ஸ்!
ஒரு வீடியோவைத் தயாரிக்க வேண்டுமென்றாலோ அல்லது எடிட் செய்ய வேண்டும் என்றாலோ கணினியில்தான் செய்ய வேண்டும் என்ற அவசியம் தற்போதில்லை. 4 GB மெமரி கொண்ட ஆண்ட்ராய்டு போன்களில்கூட நல்ல வீடியோ மேக்கிங் ஆப்ஸ்களை இன்ஸ்டால் செய்து, தரமான வீடியோக்களைத் தயாரிக்க முடியும். அப்படி க்யூட்டான மற்றும் பயனுள்ள வீடியோக்களை உருவாக்க உதவும் இரண்டு சூப்பர் ஆப்ஸ் இங்கே!
குயிக் (Quik)
ஆக்ஷன் கேமராக்களின் சூப்பர் ஸ்டாரான கோப்ரோ நிறுவனம் வெளியிட்டிருக்கும் ஆப்தான் குயிக். பெயருகேற்ற படியே விரைவான வீடியோ மேக்கிங்கில் கில்லி இந்த ஆப். வீடியோக்களில் சேர்க்க வேண்டிய புகைப்படங்களை க்ளிக் செய்து, ‘ஓகே’ சொன்னால் போதும், தானாகவே ஆடியோ, ஸ்பெஷல் எஃபெக்ட் எல்லாம் சேர்த்து வீடியோவாக்கித் தந்துவிடுகிறது இந்த குயிக். அது பிடிக்கவில்லை என்றால் நாம் எடிட் செய்துகொள்ளலாம்.
சின்ன சின்ன டூல்கள் மூலமாகவே நம் வீடியோ தயாராகிவிடும் என்பது இதன் ப்ளஸ். ஆனால், ஆப் சைஸ் முதல் போனில் எடுத்துக்கொள்ளும் மெமரி வரை அனைத்துமே அதிகம் என்பது மட்டும் மைனஸ். வீடியோ எடிட்டர்களின் அடிப்படை அம்சங்களான விதவிதமான தீம்கள், எழுத்துருக்கள், ஆடியோ, வீடியோவை ஸ்பெஷல் ஆக்க உதவும் ஃபில்டர்கள் போன்றவை போதுமான அளவுக்கு இருக்கின்றன.
ஒரு வீடியோவுக்காக மொத்தம் 75 புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை ஒரே நேரத்தில் பயன்படுத்த முடியும். வீடியோக்களை ஹெச்.டி தரத்தில் தருவதோடு, அவற்றைச் சேமித்து வைக்கவும், சோஷியல் மீடியாக்களில் ஷேர் செய்யவும் எளிதான ஆப் இந்த குயிக்.
டவுன்லோடு செய்ய :https://play.google.com/store/apps/details…
ஃபில்மோரா கோ (FilmoraGo)
எடிட்டிங் பற்றி எதுவுமே தெரியாதவர்கள்கூட, மிக எளிதாக எடிட் செய்யவும், வீடியோக்களை உருவாக்கவும் உதவும் இலவச ஆண்ட்ராய்டு ஆப் இந்த ஃபில்மோரா. ஆப் டிசைன் முதல் மெனு ஆப்ஷன்கள் வரை அனைத்துமே தெளிவாகப் பயன்படுத்தும்படி இருப்பதால், புதியவர்கள்கூட சில நிமிடங்களிலேயே வீடியோக்களைத் தயார் செய்துவிடலாம்.
வீடியோவுடன் வாய்ஸ் ஓவர்களைச் சேர்ப்பது, சவுண்ட் எஃபெக்ட்ஸ், ட்ரிம்மிங், தீம்கள், டிரான்சிஷன் ஆப்ஷன்கள், எழுத்துக்களைச் சேர்ப்பது, விதவிதமான ஃபில்டர்கள், சோஷியல் மீடியா ஷேரிங் என வீடியோ எடிட்டிங் மென்பொருள்களில் இருக்கும் நிறைய ஆப்ஷன்கள் இந்த ஆப்பிலேயே எளிதாகக் கிடைக்கின்றன. இதுபோக இன்னும் கூடுதல் அம்சங்கள் வேண்டும் என்பவர்கள், ஆன்லைனில் டவுன்லோடும் செய்துகொள்ளலாம்.
அடிப்படை விஷயங்கள் மட்டுமில்லாமல், கூடுதல் சிறப்பம்சங்களுடன் கூடிய வீடியோக்களைத் தயாரிக்க விரும்புபவர்களுக்கு நிறைய டுடோரியல் வீடியோக்களும் யூடியூப்பில் கிடைக்கின்றன. அவற்றைப் பார்த்து, கொஞ்சம் கொஞ்சமாக உங்கள் வீடியோக்களை மெருகேற்றலாம். இதில் தயாராகும் வீடியோக்களின் குவாலிட்டியும் நன்றாக இருக்கிறது. பெர்சனல் வீடியோக்கள் முதல் ஆபீஸ் பிரசன்டேஷன்களுக்கான வீடியோ வரை அனைத்துக்கும் கைகொடுக்கிறது இந்த பில்மோரா.
டவுன்லோடு செய்ய:https://play.google.com/store/apps/details…
0 comments:
Post a Comment